பழைய சிவன் ஆலயத்தில் தனி நவக்கிரஹ சன்னதிகள் இருந்ததா?
ஆன்றோர் சொல்லும் (செவி வழிக்) கதைகள்
(கண்களை மூடிக்கொள்ளுங்கள் - மனதோடு ஒரு ரவுண்டு அடித்து சிவன் கோவிலுக்குள் சுற்றி வருவோம்.)
பழைய சிவாலயங்களில் தனிப்பட்ட நவக்கிரஹ சன்னதி இருக்காது.
ஏனெனில் அத்திருக்கோவில்களில், கோவிலுக்குள் நுழையும்போது
இடப்புறம் சூரியனின் - தனித்த திருவுருவமும்
சிவனே - புதனாகவும்
அம்பிகையே - ராகுவாகவும்
சுற்றுப்பிரகாரத்தில்
தட்சிணாமூர்த்தியே - குருவாகவும் (அதனாலேயே குருப்பெயர்ச்சி அன்று தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு வழிபாடு, ஆயினும் பலர் இன்னமும் குருப்பெயர்ச்சி என்றால் தட்சிணாமூர்த்திக்கு என்று நினைக்கின்றனர். அது தவறு, இதுபற்றி அடுத்த பதிவில் காண்போம்)
அதற்கு அடுத்தாற்போல சிவனின் சுற்றுப்பிரகாரத்தில் பின்புறமுள்ள கன்னிமூலையில் விநாயகர் - கேதுவாகவும்
இந்தப்பகுதியில் முருகனின் திருவுருவம் - செவ்வாயாகவும்
சிவனின் பின்புறமுள்ள திருமால் உருவம் - சுக்கிரனாகவும்
சண்டிகேஸ்வரர் பின்புறம் - சனீச்சரண் - தனித்த திருவுருவமும்
பைரவருக்கு அடுத்தபடியாக சந்திரனின் - தனித்த திருவுருவமும் ஆக
நம் முன்னோர்கள் வழிபட்டு வந்ததாக கூறுவர்.
அதன் காரணத்தாலேயே தனித்த நவக்கிரஹ சன்னதியை பெரும்பாலும் சிவன் சன்னதியில் காணமுடியாது. அப்படிக் காணப்படும் நவக்கிரஹ சன்னதிகளும், கோவில் கட்டப்பட்ட வருடத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நவக்கிரஹ வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

No comments:
Post a Comment