தொல்லைகள் தீர்த்தருளும்
நெல்லை கோவிந்தர்
பெருமாள் ஸ்ரீ நெல்லை கோவிந்தா
சயனித்திருக்கும் காட்சியாக அமைந்துள்ளது, திருச்செந்தூரிலும், சிதம்பரத்திலும்
மற்றும் திருநெல்வேலியிலும் காண்பது ஆன்மீக அன்பர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக
அமையும். மற்ற இரு கோவில்களிலும், ஒருகையின் மீது தலைவைத்து, சயனித்தவாறு அமைந்த
பெருமாள், இத் திருநெல்வேலி திருத்தலத்தில் மட்டும், வலதுகையை, கிண்டியுடன்
தீர்த்தாபிஷேகம் சிவனுக்கு செய்துகொண்டும், மார்பில் சிவனின் அம்சத்துடனும்,
ருத்ராட்சம் வில்வம் சகிதம் சயனித்திருக்கும் திருக்கோலத்தினை பார்த்த
மாத்திரத்தில், வைணவ, சைவ சமய ஆன்மீகப் பெருமக்கள் அந்த அனந்த சயனப் பெருமாள
சன்னதியின் உள்ளே அருகே சென்று, சில நிமிடங்கள் நின்று, கண் மூடி வணங்கி வழிபடும்
அந்தக் கணமே, மெய்சிலிர்க்க அந்த மகோன்னத அருளுணர்வினை, மெய் மறந்து அறிந்திட இயலும்.
இத்திருக்கோவிலின் இந்த
அம்சத்தினைக்கண்டு, உணர்ந்த பலரும் இதன் மகிமையை அவ்வளவாக வெளியில் பரப்புவதில்லை.
தனக்கு அருள்கிடைத்தவண்ணம், குழந்தைகளின்
கல்வி வளம் பெருகியது. பணி வாய்ப்பு
கிடைத்த்து, திருமணத்திற்கு காத்திருந்த குழந்தைகளுக்கு திருமணம் கைகூடியது,
புத்திரப் பேர்ருள் இன்றி தவித்த தம்பதியர்க்கு புத்திர பாக்கியம் கிடைத்து ஆகிய
மிக முக்கியமான வரமருளும் ஸ்ரீ வைணவ ஸ்ரீ சைவ திருஅவதாரங்களின் ஒன்றுபட்டு, ஓரே
சுற்றில் சுற்றி வணங்கி அருள்பெறத்தக்கதாய் அமைந்து அருள்தரும், நெல்லை ஸ்ரீ கோவிந்தா
அலர்ஜி என்று சொல்கின்ற, எவராலும் குணப்படுத்த இயலாத தோல் மற்றும் இது தொடர்பான
பல்வகை நோய் நீக்கிவரமருள்வதில் முதன்மைப் பெறுவதாக ஐதீகம்.. துளசியும்,
வில்வமும், திருநீரும் எவ்வகை நோயையும் நீக்குமன்றோ.!..
செவி வழிச் செய்தி -
இத்தலத்தில் ஆட்சி செய்து வரும் அருள்மிகு.நெல்லையப்பரிடம் அத்திருமாலே வந்து “உங்களுடைய வாகனமாக நானே இத்திருத்தலத்தில் இருக்க வேண்டும் ” எனக் கேட்டுக் கொண்டதாகவும், அதன் பெயரிலேயே இத்திருத்தலத்தில் கொடிமரத்தின் முன் உள்ள வெள்ளைநிற காளை மாக்காளை (மால்-காளை) இருக்கக் காணலாம்.
மேலும் திருமாலின் பணிவான வேண்டுதலை கேட்டு மனமகிழ்ந்த இறைவன் அவ்வரத்தினை அளித்ததுடன், இத்தலத்தில் நீயும், நானும் வேறல்ல இருவரும் ஒருவரே என்ற வரத்தினையும் அளித்துள்ளார். எனவே இத்தலத்தின் கருவறையில் அருள்மிகு நெல்லையப்பரின் அருகிலேயே அவருக்கும் ஒரு சன்னதி இங்குள்ளது என்பது செவி வழிச் செய்தி.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஆதாரமாகவும், பக்தியுடன் பணிந்தால் தனக்கு நிகரானதொரு இடத்தை தந்து காத்திடும் பரம்பொருள் வீற்றிருக்கும் இத்தலத்தை வழிபடுவோம்.. அருள்
பெறுவோம்.. நன்றி.

No comments:
Post a Comment