Wednesday, 4 July 2018

அருகம்புல்லில் இத்தனை அருமையான குணங்களா!

அருகம்புல்லில் இத்தனை அருமையான குணங்களா!

By vayal on 10/08/2015
ஆடு, மாடுகளுக்குதான் அருகம்புல், உணவு. ஆனால் மனிதர்களுக்கு அது மருந்து. அருகம் எளிமையாக கிடைப்பதால், அதை பலர் ஏளனமாக நினைக்கின்றனர். அதன் மகத்துவம் அறிந்தால், மறக்க மாட்டார்கள்.
அருகம்புல்லுக்கு பல விசேஷமான தன்மைகள் இருக்கின்றன. நாக்கு வறட்சி, நாக்கு சுவை தெரியாமல் போவது, வாந்தி, எரிச்சல், பித்த மயக்கம், சோர்வு இது எல்லாவற்றுக்கும் அருகம்புல் சாறு மிகவும் நல்லது.

ரத்த பித்தத்தை தணித்து, உடம்பை குளுமையாக்கும் சக்தி, அருகம்புல்லுக்கு இருக்கிறது.
அக்கி என்பது ஒரு அவஸ்தையான தோல் நோய். இந்நோய் வந்தவர்கள் அருகம்புல்லின் வேரை எடுத்து, கழுவி, சுத்தமான தண்ணீரில் வேகவைத்து, பசு நெய் கலந்து பூசிக் குளித்தால், நோயின் தாக்கம் குறையும். அதே போல், அருகம்புல்லின் வேரை அரைத்து, அந்த விழுதோடு, அரிசி கழுவிய தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பித்த வாந்தி தணியும்.
மாதவிடாய்க்கு முன்னும், பின்னுமாக இருக்கும் பெண்கள், அருகம்புல்லை அரைத்து, அந்த விழுதில் தினமும் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சரியான இடைவெளியில் வரும். இது தவிர அருகம்புல் ஜூஸுக்கு, பித்தப்பை கல், சிறுநீரகக் கல், ஆகியவற்றை கரைக்கும் சக்தி உள்ளது.
அருகம்புல்லை வேரோடு அரைத்து விழுதாக்கி, அதோடு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், நலங்கு மாவு கலந்து உடம்பில் பூசி குளித்தால்சொறி, சிரங்கு, அரிப்பு எல்லாவற்றையும் போக்கும். சில பெண்களுக்கு கழுத்தில் தாலிக்கயிறு, சங்கிலி பட்டு அந்த இடமே கருப்பாக மாறியிருக்கும். சில பெண்களுக்கு உள்பாவாடையை இறுகக் கட்டி, இடுப்பு கருப்பாக ஆகியிருக்கும். இதற்கெல்லாம் கூட அருகம்புல் விழுது + மஞ்சள் நலங்கு மாவு அற்புதமான மருந்தாகும். இந்த மூன்றையும் கலந்து தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
நலங்கு மாவு தயாரிப்பு: நலங்கு மாவு எப்படி செய்யறதுனு கேக்குறீங்களா? பாசிப்பயறை அரைச்சு வெச்சுக்கணும். ரோஜா மொட்டு, கஸ்தூரி மஞ்சள், விளாமிச்சை வேர் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), வெட்டி வேர், காய்ந்த எலுமிச்சை தோல், கதிர்ப் பச்சை
(பூக்கடைகளில் கிடைக்கும்) இது எல்லாத்தையும் நல்லா வெய்யில்ல காயவெச்சு, மெஷின்ல கொடுத்து, அரைச்சுக்கணும்.
இந்த மாவோட, பயத்த மாவையும் தரமான வாசனை பொடியையும் கலந்தா, அதுதான் நலங்குமாவு. சோப்புக்கு பதிலா இந்த மாவைத் தேய்ச்சுக் குளிச்சா, சருமம் பட்டுப்போல மிருதுவா இருக்கும்.

No comments:

Post a Comment