Tuesday, 5 December 2023

பாளையங்கோட்டை - அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில் வரலாறு

பாளையங்கோட்டை - அருள்மிகு ராஜகோபால் சுவாமி திருக்கோயில் வரலாறு

மூலவர் : வேதநாராயணப்பெருமாள் , கோபாலசுவாமி

தாயார் : ஸ்ரீதேவி, பூதேவியருடன், பாமா , ருக்மணி

ஊர் : பாளையங்கோட்டை,   திருநெல்வேலி


ஸ்தல வரலாறு:

        சமுத்திரத்துக்கு நடுவே தோயமாபுரம் என்ற பட்டணம் இருந்தது. அங்கு வாழ்ந்த அரக்கர்கள் முப்பத்து முக்கோடி தேவர்களையும், முனிவர்களையும், உலக மக்களையும் மிகவும் துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இந்திர லோகத்துக்குச் செல்ல விரும்பினான். அதன்பொருட்டு தேவேந்திரனிடம் அனுமதி வேண்டினான். அதற்கு இந்திரன், அர்ஜுனா நீ தாராளமாக இந்திரலோகத்துக்கு வரலாம். அதற்கு முன்பு நீ செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. கடலுக்கு நடுவில் உள்ள தோயமாபுரத்தில் வாழும் அரக்கர் கூட்டத்தை நீ அழித்து, தர்மத்தை நிலைநாட்டிட வேண்டும் என்று கூறினார்.

    அர்ஜுனனும் இந்திரன் கூறியபடியே தோயமாபுரத்துக்குச் சென்று அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டான். ஆனால் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதாக இல்லை. அரக்கர்களை அழித்தாலும், அவர்கள் மீண்டும் எழுந்து வந்து போரிட்டனர். அர்ஜுனன் செய்வது அறியாமல் திகைத்து நின்றான். அப்போது வானில் இருந்து, அர்ஜுனா, அசுரர்கள் உன்னை கேலி செய்தால் மட்டுமே அவர்களை நீ வெல்ல முடியும். இதுதான் அவர்கள் பெற்றிருக்கும் வரம்' என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே அர்ஜுனனின் மனதில் சட்டென்று ஒரு திட்டம் உதித்தது. போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓடுவதுபோல அர்ஜீனன் ஓடினான். அதைக் கண்ட அசுரர்கள் அர்ஜீனனை பார்த்து கேலிசெய்து கைதட்டிச் சிரித்தார்கள். அர்ஜுனனும் இதைத்தானே எதிர்பார்த்தான். உடனடியாக, தன்னிடமிருந்த பாசுபத அஸ்திரத்தை ஏவி ஒட்டுமொத்தமாக அரக்கர் கூட்டத்தை கொன்று குவித்தான்.

            அர்ஜுனனின் இந்த வீர தீரச் செயலை மனதாரப் பாராட்டியதோடு, அதுவரை தான் வணங்கி வழிபட்டு வந்த ராஜகோபாலர் விக்கிரகத்தையும் அவனுக்கு பரிசாக கொடுத்து சிறப்பித்தான் தேவர்களின் தலைவன் இந்திரன். அந்த ராஜகோபாலரை அனுதினமும் பயபக்தியோடு வணங்கி வழிபட்டு வந்தான் இந்திரன். பிற்காலத்தில் அந்த விக்ரகம் இந்திரனால் பெருமாள் திருவுளப்படி கங்கையில் சேர்பிக்கப்பட்டது.

      தாமிரபரணியின் தென்திசை பகுதியில் மணற்படைவீடு என்ற பகுதியினை உக்கிர பாண்டியன் ஆண்டு வந்தான். அவனது மகனான சீவலனுக்கு புத்திர பாக்கியம் இல்லாத நிலையில் புத்திர பாக்கியம் வேண்டி யாத்திரை சென்றான். பஞ்சபாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் பூஜித்த கோபாலனது விக்கிரகத்தை கங்கையாற்றில் விட்டு சென்றதாகவும், அதை எடுத்து வந்து செண்பகாரண்யத்தில் பிரதிஷ்டை செய்தால் சீவலனது விருப்பம் நிறைவேறும் என்று கேள்விப்பட்டு சீவலன் கருடன் வட்டமிடும் கங்கை கரையில் கோபாலனின் விக்கிரகத்தை கண்டெடுத்து அதை கண்வ முனிவர் ஆலோசனைப்படி வேதநாராயணர் எழுந்தருளியிருக்கும் திருமங்கை நகரான செண்பகாரண்ய ஷேத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும், இதைத்தொடர்ந்து அரசனுக்கு இரு புத்திரர்கள் பிறந்ததாகவும் வரலாறு தெரிவிக்கிறது. இதனால் இன்றும் பக்தர்கள் சந்தான பாக்கியத்திற்காக (குழந்தை பாக்கியம்) கோபாலசுவாமியை பிரார்த்திக்கின்றனர்.

கோயில் சிறப்புகள்:

        இந்த ஆலயத்தின் ராஜகோபுரத்தில் ஆதிவராகர் எழுந்தருளியுள்ளதால் இக்கோவில் ஆதிவராக ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

      திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரின் மத்தியில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது, அழக மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில். தொன்மை வாய்ந்த இந்த ஆலயம் மாநவல்லபன் என்ற பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு கோபுரங்களுடனும், விமானங்களுடனும், இரண்டு திருச்சுற்றுக்களுடனும், எண்ணற்ற மண்டபங்களுடனும் காட்சி தருகிறது இந்தக் கோவில்.

        இங்கு அழகே வடிவான ராஜ களை நிரம்பிய அழகிய மன்னாரும், வேதங்களுக்கு அதிபதியான வேதநாராயணரும், ஆநிரைகளின் தலைவனான கோபால சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். 

        கிழக்கு நோக்கி அமைந்துள்ள கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான வேதநாராயண பெருமாள் 8 அடி உயரத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். தேவியர்கள் இருவரும் வேதவல்லி தாயார், குமுதவல்லி தாயார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

        ஸ்ரீகோபாலன் ருக்மணி சத்யபாமா சமேதராய் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அர்த்த மண்டபத்தில் இருந்து காட்சி தருகிறார். இவரை உற்சவமூர்த்தி என்றும் அழைப்பர். வேதநாராயண பெருமாளுக்கு தென்திருச்சுற்றில் ஸ்ரீதேவி தனிக்கோவிலும், வடக்கு திருச்சுற்றில் பூதேவி தனிக்கோவிலும் கொண்டுள்ளனர்.

    அருள்மிகு செண்பக விநாயகர் தென்பகுதியில் ஒரு சிறிய அளவில் தனி சன்னிதியில் காணப்படுகிறார். 

     உள் திருச்சன்னிதியின் மேற்கே ஸ்ரீ பரமபதநாதர் தமது தேவிமார்களுடனும், ஸ்ரீ ஆதிவராகர் லட்சுமி தேவியை மடியில் அமர்த்திய வண்ணமும், தசாவதார மூர்த்திகளும் காட்சி தருகின்றனர்.

        கருவறையின் மேல்தளத்தில் ஸ்ரீ அழகிய மன்னார் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் வேறு சில ரிஷிகளுடனும் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அழியாத தாவரக்கலை வர்ணத்தால் இச்சிலைகள் மெருகேற்றப்பட்டு உள்ளன. 

     ஐந்து நிலைகளுடன் கூடிய அன்னக்கூட ராஜகோபுரம், 5 அடுக்கு உயரத்துடன் மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சுமார் 69 அடி உயரத்தில் கருவறை விமானம் அமைந்து உள்ளது.

  பிற்காலத்தில் மலையை (சிறு குன்று) சரி செய்து இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மூலவர் வர்ணகலாப திருமேனியாக கீழேயும், மேலேயும் எழுந்தருளியுள்ளார். வருடத்திற்கு மூன்று முறை மட்டுமே அபிஷேக மூர்த்தியாக காணப்படுகிறார். ஸ்ரீ வித்யா ராஜகோபால மூர்த்தியான இவர், மிகவும் வரப்பிரசாதியாக உள்ளார். 

   இந்த ராஜகோபுரத்தில் தெய்வ சிலைகளை தவிர மனித உருவ வழிபாடுகளே கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

 தஞ்சை பெரிய கோவில் கருவறை தமிழகத்தில் உள்ள கோவில் கருவறைகளில் முதலாவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை இரண்டாவதாகவும் அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கருவறையை கொண்டதாக இத்திருத் தலம் திகழ்கிறது. இக்கோவில் துவித்தலம் (இரண்டு அடுக்கு) என்ற சிறப்பை பெற்றுள்ளது.

    இக்கோயில் தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோயிலில் விஷ்ணுப்பிரியன் என்ற அர்ச்சகர் பூஜை செய்துவந்தார். அவருக்கு அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தன. எனவே தமக்கு பின் சுவாமிக்கு பணிவிடை செய்ய ஆண் குழந்தை வேண்டும் என கோபாலனிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் பின்னரும் அவரது மனைவி கலாவதிக்கு பெண் குழந்தையே பிறந்தது. இதனால் கோபமடைந்த விஷ்ணுப் பிரியன், ஆரத்தி தட்டினை சுவாமி மீது வீசினார். இதனால் சுவாமியின் மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றுபார்த்தபோது பிறந்திருந்த பெண் குழந்தை ஆண் குழந்தையாக மாறியிருந்தது. வெலவெலத் துப்போன அர்ச்சகர் கோயிலுக்கு வந்து சுவாமியிடம் வருந்தினார். அப்போது கோபாலசுவாமி, பாமா ருக்மணி சமேதராய் காட்சியளித்தார். இதனால் சுவாமிக்கு "பெண்ணை ஆணாக்கிய அழகிய மன்னார்' என்ற பெயர் ஏற்பட்டது.

திருவிழா:

    ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி மாதத்தில் பதினோறு நாட்கள் பிரம்மோற்சவமும், பங்குனி உத்திரம் அன்று தேரோட்டமும் மிகப் பெரிய விழாவாக விமரிசையாக நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் பத்தாம் நாள் தேரோட்டம் முடிந்து அன்று இரவு பெருமாள் தவழும் கண்ணனாக பல்லக்கில் எழுந்தருளுவார். பதினொராம் திருநாளன்று தாமிரபரணியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். ஆவணி மாதத்தில் வருகின்ற கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவை மற்றும் விஜயதசமி பரிவேட்டை, கார்த்திகை தீபம், மார்கழி திருப்பாவை வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, தை மாத ரதசப்தமி ஆகியவையும் சிறப்பான விழாக்களாக நடைபெறுகின்றது.

திறக்கும் நேரம்: 

காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: 

அருள்மிகு மன்னார் ராஜகோபால் சுவாமி திருக்கோயில், 
பாளையங்கோட்டை - 627 002 
திருநெல்வேலி மாவட்டம்.
போன்: +91-462-257 4949.


அமைவிடம்:  

    திருநெல்வேலி பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட்களில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஒரு கி.மீ, தூரத்திலுள்ள கோயிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.

A painting of Sri Parthasarathy Perumal in Padmanabhaswamy temple

 A painting of Sri Parthasarathy Perumal 

in Padmanabhaswamy temple, Trivandrum. 

            The Lord holds a whip in one hand and the divine conch Panchajanyam in the other. Note the beautiful face and the unique crown



ஆர்.ஆர்.சங்கரசுப்ரமணியன் எழுதிய எனது சொந்த ஊர் ராவணசமுத்திரம்

 ஆர்.ஆர்.சங்கரசுப்ரமணியன் எழுதிய எனது சொந்த ஊர் ராவணசமுத்திரம்

        ரவணசமுத்திரம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் தாலுகாவில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும். ரவணசமுத்திரம் கடையத்திலிருந்து 1.4 கிமீ தொலைவிலும் திருநெல்வேலியிலிருந்து 34 கிமீ தொலைவிலும் உள்ளது. (நான் இப்போது தங்கியிருக்கும் சென்னையில் இருந்து 568 கி.மீ.) நமது குலதெய்வம் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் இருக்கும் கடையம் (1.4 கி.மீ.), அம்பாசமுத்திரம் (12.3 கி.மீ.), கீழபாவூர் (13.9 கி.மீ.) மற்றும் பாப்பாக்குடி (15.8 கி.மீ.) ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ளது. பின்வருபவை ராவண சமுத்திரத்தின் ஒரு பகுதியாக துணை கிராமங்களாகக் கருதப்படுகின்றன:

அகம்பிள்ளைக்குளம்,

மீனாட்சிபுரம்,

இராமலிங்கபுரம்,

வாகைக்குளம் & பிள்ளைக்குளம்.

        மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உருவாகும் "ராமநதி" என்ற வற்றாத நதியின் கரையில் ராவணசமுத்திரம் உள்ளது. இந்த கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் எல்லையில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது. ரவணசமுத்திரம் மற்றபடி கடையம், ஆழ்வார்குறிச்சி, சிவசைலம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது இயற்கையின் ஏராளமான காட்சிகளைக் கொண்ட இடம்.

        சமுத்திரம் என்றால் பொருள்களின் தொகுப்பு, ஆனால் பொதுவாக அது தண்ணீருக்கானது - கடல். உதாரணமாக ஜனசமுத்திரம் என்றால் பெரும் கூட்டம். எனவே இது அதிக மக்கள்தொகை (அந்த நாட்களில்) அல்லது பல சாதிகள் அல்லது மதங்களின் தொகுப்பாக இருக்கலாம்.

   பாண்டிய/நாயக்கர் சாம்ராஜ்யத்தில் அமைச்சராகவும், இராவண சமுத்திரத்தை நிறுவியவருமான ஸ்ரீ..ராவணப்ப நாயக்கரால் இப்பெயர் வந்தது. அவர் இந்த கிராமத்தை நிறுவியவர் என்பதால், அந்த இடத்திற்கு அவரது பெயரிடப்பட்டது. ராவணசமுத்திரம் முதலில் இந்திரபுரி என்று அழைக்கப்பட்டது. இப்போதும் பத்து நாள் தை பூசத் திருநாளின் 4ஆம் நாள் திருவிழாவின்போதும் இரவணசமுத்திரத்தில் இன்னும் வசிக்கும் (நாயக்கர்களும் நாயுடுகளும் ஒன்றே) அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்துகிறோம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

    ரவணசமுத்திரம் அதன் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது. இது பல்வேறு மதங்கள், சாதிகள் மற்றும் மதங்களால் பிணைக்கப்பட்ட அமைதியான கிராமம். இந்த கிராமம் அனைத்து சமூகத்தினரிடையே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மக்கள் மிகவும் நட்பு மற்றும் இயற்கையில் உதவுகிறார்கள்.

    ரவண சமுத்திரத்தின் மக்கள் தொகை சுமார் 4000. இதைப் பூர்வீகமாகக் கொண்ட ஓய்வு பெற்ற பலர் தங்கள் வேர்களைத் தக்க வைத்துக் கொண்டு இந்த கிராமத்தில் வாழ்கின்றனர், எனவே இன்றும் 95% பிராமணர்களாக இருக்கும் ஒரே அக்ரஹாரம் இதுதான். சிறந்த இசைக்கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் உயர் பதவியில் உள்ள அரசு அதிகாரிகள் இங்கு இருந்து வருவதால் இந்த கிராமம் நெல்லையின் கேம்பிரிட்ஜ் என்று அழைக்கப் படுகிறது. சுமார் 80 வீடுகளைக் கொண்ட அக்ரஹாரம் நாமசங்கீர்த்தனம் மற்றும் வேத பாராயணத்திற்கும் மிகவும் பிரபலமானது.

    இது ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ரயில் நிலையத்தையும் கொண்டுள்ளது. அன்றைய அக்கவுண்டன்ட் ஜெனரல் திரு.சிவராம ஐயர் மற்றும் ரயில்வேயின் நிதி ஆணையர் திரு.டி.எஸ்.சங்கர அய்யர் (என் தாய்வழி தாத்தா) அவர்களின் குடும்பங்கள் இந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அதற்குக் காரணம் என்று கதை செல்கிறது. ராவணன் என்று பெயர் இருக்க வேண்டிய நிலையில், ரயில்வே துறையினர் ராவணன் என்றும் ராவணன் என்றும் இந்தியில் பல்வேறு இடங்களில் தவறாக எழுதி, ராமநதி அருகே பாய்ந்து மக்களை குழப்பி வருகின்றனர். (எனது தந்தை வழி தாத்தா சீனிவாச ஐயர் வடக்கு மாட தெருவில் உள்ள ஞானகுட்டி அய்யர் என்று அறியப் படுகிறார்). எனது தாய்வழி தாத்தா, பாட்டி மற்றும் எனது பெற்றோரின் சிறு விவரக்குறிப்பை இணைப்பில் தருகிறேன்.

    மாவட்டத்தில் உள்ள இருபத்தி நான்கு கிராம பஞ்சாயத்துகள் 2007 - 2008 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிர்மல் கிராம புரஸ்கார் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளன. திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டங்களை செயல்படுத்தி தூய்மையை உறுதி செய்யும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் கிராம மக்கள் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வேண்டும். இந்த 24ல் ரவணசமுத்திரமும் ஒன்று.

    ரவணசமுத்திரத்தில் தொடக்கப்பள்ளி மற்றும் நூலகம் உள்ளது. உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிக்கு கிராமத்தின் அருகில் உள்ள இடம் கடையம் அல்லது ஆழ்வார்குறிச்சி ஆகும்.

    ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படும், கடைசி நாள் பூசம் மற்றும் பிற ஊர்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். வெளியாட்களும், கிராமத்தைச் சேர்ந்த பலரும் சங்கல்பம் மூலம் இந்தப் பண்டிகையை நடத்துவதற்கும், இந்தப் பத்து நாட்களில் கிராமம் முழுவதும் உணவுப் பொருட்களைப் பராமரிப்பதற்கும் பணம் திரட்டுகிறார்கள்.

        இந்த பத்து நாட்களுக்கு முழு கிராம சமையல் அறையும் மூடப்பட்டிருக்கும் மற்றும் காலை 5.30 மணி முதல் இரவு இரவு உணவு வரை, சமுதாய கூடத்தில் நேர்த்தியான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

            காலையிலும் மாலையிலும் பெண்கள் தங்கள் கோலம் காட்டுகிறார்கள். 

        தினமும் காலை மற்றும் இரவில் அனைத்து வீடுகளுக்கும் இறைவனின் உலா மட்டுமின்றி, நாம சங்கீர்த்தனம், கதா காலட்சேபம், கச்சேரிகள் மூலம் மாலை பொழுது போக்கையும் செய்யலாம். பின்னர் இரவு 8.30 மணிக்கு தமிழ் அறிஞர்களின் அற்புதமான சொற்பொழிவுகள் உள்ளன.

AMAANAVAN (அமானவன்)

''அமானவன்''
------------
 'அமானவன்'...இப்படி ஒரு பெயர் கேள்விப்பட்டதில்லையே...! இது கடவுளின் பெயரா... இல்லை ஏதாவது புராணப் பாத்திரமா...!

இவனை பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் இறப்புக்கு பின்னரே பார்க்க முடியும். இவனது இருப்பிடம் வைகுண்டம்.

அங்கு பெருமாளின் இருப்பிடத்திற்கு முன்னால் துவார பாலகர்கள் இருப்பார்கள்.

 பெருமாள் கோயிலில் ஜெயன், விஜயன் என்ற பெயரில் சிலை வடிவாக பார்த்திருப்பீர்கள். அவர்களுக்கு சற்று முன்னால் அமானவன் நின்றிருப்பான்.

சரி...இவனுக்கு அங்கு என்ன வேலை!

நீங்கள் தினமும் காலையில் எழும்போதே சுவாமி படத்தின் முன் விழித்திருக்கலாம்.

'ஹரி.. ஹரி..., நாராயணா... கோவிந்தா...பத்மநாபா' என்றெல்லாம் பெருமாளின் பெயர்களைச் சொல்லியபடியே எழலாம். 

எந்நேரமும் பிறரது நலம் பற்றி சிந்தித்திருக்கலாம். 

என்ன கஷ்டம்
வந்தாலும், “பெருமாளே! எனக்கு எல்லாம் நீயே.. இந்தக் கஷ்டத்தையும் நீ தந்த பரிசாக ஏற்கிறேன்'' பாசிட்டிவ்' ஆக நினைக்கலாம். புரட்டாசி சனி விரதம் இருந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட நல்லவர்கள் இறந்த பிறகு, வைகுண்ட வாசலுக்கு செல்வார்கள். 

அங்கே அமானவன் காத்திருப்பான். 

அவர்களைக் கண்டதும், கையைப் பிடித்து அழைத்துச் செல்வான். 

இவனுடன் வருவோரை துவார பாலகர்கள் தடுக்க மாட்டார்கள். 

பெருமாள் முன் நிறுத்தி மகாலட்சுமி தாயாரோடு பெருமாளைத் தரிசிக்க செய்வான்.

இவனுக்கு ஏன் அமானவன் என பெயர் வந்தது?

'மானவன்' என்றால் 'மனிதன்'. 'அமானவன்' என்றால் மனிதன் அல்லாதவன். அதாவது தேவபுருஷன். புண்ணியம் செய்தவர்களை பெருமாளிடம் அழைத்துச் செல்வது இவனது புண்ணிய பணி.

'அமானவன் கரத்தாலே தீண்டல் கடன்' என்கிறார் வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகள்.

அதாவது, 'அமானவன் என்னை கைப்பிடித்து பெருமாளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்' என்கிறார்.

நம் கைகளையும் அமானவன் பிடிக்க இன்றே நல்லதை செய்யத் தொடங்குவோம்...

கோவிந்தா ஹரி கோவிந்தா !

நான் பாரத்தை இறக்கி வைப்பவன்! ஏற்றுபவனல்ல...

            ஒரு நாள் ஒரு கிணறு அருகில் ஒரு கோபிகை ஸ்த்ரீ தண்ணீர் குடத்தை யாராவது தூக்கிவிடுவார்களா என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கே சிறுவனான ஸ்ரீகிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான்.

            கிருஷ்ணனைப் பார்த்த அந்த கோபிகை  தண்ணீர் குடத்தை தூக்குவதற்காக கிருஷ்ணனை கூப்பிட்டாள். கிருஷ்ணனோ கூப்பிட்ட குரல் கேட்காதது போல சிறிதும் கவனிக்காமல் போய்க் கொண்டிருந்தான்.

            கோபிகையோ கிருஷ்ணனை கூப்பிட்டு கூப்பிட்டு தொண்டை வரண்டு விட்டது. கிருஷ்ணனோ திரும்பிகூட பாராமல் போய்விட்டான்.

            ஒருவழியாக கோபிகை நீர் நிறைந்த குடத்தை தலையில் சுமந்தபடி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தன் வீடு வந்தவள் அதிர்ந்தாள்.. அங்கே ஸ்ரீகிருஷ்ணன் அவள் வீட்டு வாசலில்அவளுக்காககாத்திருந்தான்.

            கோபிகை வாசல் அருகே வந்ததும்  தானே முன்வந்து நீர் நிறைந்த குடத்தை கீழே இறக்கி வைத்தான். உடனே கோபிகை ''கிருஷ்ணா" குடத்தை தூக்குவதற்காக உன்னை அழைத்தபோது நீ திரும்பிகூட பாராமல் சென்றுவிட்டாய். இப்போது கூப்பிடாமல் குடத்தை இறக்கி உதவி செய்தாயே  ஏன்? என்று கேட்டாள்.

        அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் தன் மந்தகாச இனிமையான புன்சிரிப்போடு மெதுவாக கோபிகையிடம் இப்படி கூறினான்.

''நான் பாரத்தை இறக்கி வைப்பவன் ஏற்றுபவனல்ல."

                                                                                                ஸர்வம் கிருஷ்ணார்பனமஸ்து!.